வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமை – கேரளா அறிவிப்பு…!
நாட்டில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் குறைந்து வரும் சூழலில், ஒமிக்ரான் வகையை சேர்ந்த புதிய கொரோனா பாதிப்புகள் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. இதனை முன்னிட்டு மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, மத்திய அரசு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. சில நாடுகள் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய நிலையில் உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.
அதனால், அதுபோன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளிடம் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனைகள் நடத்தப்படும். அவர்க்ள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.