உத்தரகாண்டில் கொரோனா பாதிப்புகளை தடுக்க அனைத்து போலீசாருக்கும் ஆன்டிஜென் பரிசோதனை,…!!
உத்தரகாண்டில் ஒமிக்ரான் பாதிப்புகள் பற்றி முதல்-மந்திரி தலைமையிலான உயர்மட்ட கூட்டம் இன்று நடந்தது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களில் நடந்த ஆன்டிஜென் பரிசோதனையில் 7 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இதனை முன்னிட்டு டி.ஜி.பி. அசோக் குமார் இன்று கூறும்போது, கொரோனா பாதிப்புகளை தடுப்பதற்காக அனைத்து போலீசாருக்கும் ஆன்டிஜென் பரிசோதனை நடத்தப்படும். அவற்றில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் மருத்துவ வசதிகள் அளிக்கப்படும் என கூறியுள்ளார்.