;
Athirady Tamil News

வவுனியாவில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும் ஊர்வலமும்!! (படங்கள்)

0

வவுனியாவில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும் ஊர்வலமும் மாவட்ட பாலியல் நோய் சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் பாலியல் நோய் சிகிச்சை நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி கே.சந்திரகுமார் தலைமையில் இன்று இடம்பெற்றது

கலந்துரையாடலின் போது எயிட்ஸ் நோய் பரவுவதன் முறைகள் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டிருந்ததுடன் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டதுடன் நகரில் முச்சக்கரவண்டிகள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் இ.ராகுலன் , பிரதிப்பணிப்பாளர் , விசேட வைத்திய நிபுனர்கள் , வைத்தியர்கள் , முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள், தாதியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.