;
Athirady Tamil News

ஆந்திராவில் கடந்த ஓராண்டில் 10 ஆயிரம் பேருக்கு எச்.ஐ.வி…!!

0

ஆந்திராவில் கடந்த ஓராண்டில் 10 ஆயிரம் பேருக்கு எச்.ஐ.வி. அறிகுறி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆந்திர மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆந்திராவில் 10.2 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் பரிசோதனை கடந்த 2015-16-ம் ஆண்டில் நடத்தப்பட்டது. பரிசோதனையில் 23 ஆயிரத்து 960 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

எய்ட்ஸ் தொற்று கண்டறியப்பட்ட பாசிட்டிவ் ரேட் 0.02 சதவீதம் ஆகும். 5ஆண்டுகள் கழித்து எய்ட்ஸ் பரிசோதனை பாசிட்டிவ் பாதியாக குறைந்துள்ளது. 2020-21-ம் ஆண்டில் 7.5 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 9,918 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது பாசிட்டிவ் ரேட் 0.01 ஆகும். தற்போது ஆந்திர மாநிலத்தில் எச்.ஐ.வி. பாதித்த 1 லட்சத்து 92 ஆயிரத்து 390 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.