;
Athirady Tamil News

வட மாகாணத்தை புரட்டி எடுக்கும் கொரோனா!

0

வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தைவிட நவம்பர் மாதத்தில் கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரித்துள்ளதாக மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தில் 2 ஆயிரத்து 661 பேர் கொவிட்-19 நோய்த்தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். எனினும் நவம்பர் மாதத்தில் 3 ஆயிரத்து 49 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் மாத்தில் கொவிட்-19 நோயினால் 71 பேர் உயிரிழந்தனர். எனினும் நவம்பர் மாதத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 பேராகக் குறைவடைந்துள்ளது.

நவம்பர் மாதத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகப்படியாக 842 பேர் கொவிட்-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 825 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் முறையே 713, 540, 129 பேர் நவம்பர் மாதத்தில் கொவிட்-19 நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் நேற்று (30) 75 பேர் கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பபாணம் மாவட்டத்தில் 30 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேரும் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் தலா 5 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் என 49 பேர் கொவிட்-19 நோயினால் நவம்பர் மாதத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் 2020 மார்ச் தொடக்கம் நேற்று வரை வடக்கு மாகாணத்தில் 41 ஆயிரத்து 952 பேர் கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 890 பேர் உயிரிழந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.