டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும் – இந்திய வானிலை ஆய்வு மையம்..!!
இந்தியாவில் நடப்பு ஆண்டு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நவம்பர் மாதம் கொட்டி தீர்த்தது. இதனால், தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் நிரம்பின. பல இடங்கள் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 132%-க்கு மேல் மழை பெய்ய கூடிய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் கூறுகையில், “ டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையில் ஆந்திர பிரதேச கடலோர பகுதிகள், தெற்கு கர்நாடகா, தமிழ்நாடு, புதுவை மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
அதேபோல், வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் மழை இயல்பை விட குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.