;
Athirady Tamil News

நாவலனின் நிதியுதவியில் சரவணை-நாரந்தனையில் பாரிய சிரமதான செயற்பாடு ( படங்கள் இணைப்பு)

0

வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீடு மூலமாக வீதி அபிவிருத்தி திணைக்களம் ( RDD ) ஊடாக 2 . 7 கீலோமீற்றர் நீளமான சரவணை – நாரந்தனை வீதியானது இரண்டு கோடி ரூபாய் முப்பத்திரண்டு லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படுகின்றது .

இதற்கமைய வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் மற்றும் தீவகம் வடக்கு பிரதேச செயலாளர் ஆகியோர் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் திரு .கருணாகரன் நாவலன் அவர்களிடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தனர் .
அதாவது மேற்படி வீதியின் அருகாமையில் சூழ்ந்து காணப்படுகின்ற பற்றைகளை அகற்றி வீதியை அகலப்படுத்தி தருவதற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர் . அதற்கமைய சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலனின் ஏற்பாட்டில் அவரது சொந்த நிதி இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாயில் ( 250000/ = ) தொடர்ச்சியாக ஆறுநாட்களாக இவ்வீதியில் பெக்கோ இயந்திரம் ஊடாகவும் , பணியாளர்கள் ஊடாகவும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு முழுமையாக துப்பரவு செய்யப்பட்டுள்ளன.

தீவகம் வடக்கு பிரதேச செயலாளர் திருமதி. ச .மஞ்சுளாதேவி , சூழகம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்களான மடுத்தீன் பெனடிக்ற் ( சின்னமணி ) , கருணாகரன் குணாளன் , ஜெபி மற்றும் சமூக ஆர்வலர்களான சரவணையூர் கிரிதரன் , சரவணை சுபாஸ் , ஓய்வுநிலை கிராமசேவகர் சகாதேவன் ஆகியோரும் இச்செயற்பாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.