மாதகல் காணி தொடர்பில் ஆளுநர் மக்களுடன் கலந்துரையாடல்!! (படங்கள், வீடியோ)
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் கடற்படையிரின் பயன்பாட்டுக்கென அளவீடு செய்ய முற்பட்ட காணிகள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
காணி உரிமையாளர் மற்றும் உத்தியோகத்தர்களை தனித்தனியாக கலந்துரையாடிய வடக்கு மாகாண ஆளுநர் காணி உரிமம் தொடர்பில் கேட்டறிந்தார்.
சிலருடைய காணிகளுக்கான சட்டநீதியான உரிமங்கள் இல்லாமை ஆளுநரால் அவதானிக்கப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் சங்கானை மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர்களை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”