சவுதியில் ஒமிக்ரான் வைரஸ் நுழைந்தது…!!!
உலகை அச்சுறுத்தி வருகிற ஒமிக்ரான் வைரஸ், சவுதி அரேபியாவிலும் நுழைந்து விட்டது. வடக்கு ஆப்பிரிக்க நாடு ஒன்றில் இருந்து வந்த ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட நபரும், அவரது நெருங்கிய தொடர்புகளும் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
வளைகுடா நாடு ஒன்றில் இந்த வைரஸ் நுழைந்திருப்பது இதுவே முதல் முறை. இதே போன்று லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலிலும் இந்த வைரஸ் கால்தடம் பதித்து இருக்கிறது.தென் ஆப்பிரிக்காவில் இருந்து அங்கு வந்துள்ள 41 வயது ஆணுக்கும், 37 வயது பெண்ணுக்கும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.
பிரேசில் நாட்டில் தென் ஆப்பிரிக்கா மற்றும் 5 தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடந்த திங்கட்கிழமை முதல் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக கடந்த 25-ந் தேதியே அங்கு மேலே கூறிய 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் வந்து உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.