குறைவில்லாத கொவிட் நோயாளர்கள்!
நாட்டில் பதிவான கொவிட்-19 தொற்றார்களின் எண்ணிக்கை 566,000 ஐ தாண்டியுள்ளது.
நேற்று (03) புதிதாக 725 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களில், இலங்கையில் நாளாந்தம் பதிவான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 700ஐ தாண்டியுள்ளது.
எவ்வாறாயினும், நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 566,196 என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மொத்த பாதிக்கப்பட்டவர்களில், 541,536 பேர் தற்போதைய நிலையில் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 10,241 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் 20 கொவிட் தொற்றுக்குள்ளான மரணங்களை உறுதிப்படுத்தியதன் மூலம் இலங்கையில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 14,419 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் நேற்றைய தினம் முதன்முறையாக ஒமிக்ரோன் (Omicrone) வைரஸால் பாதிக்கப்பட்ட யுவதியொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.