மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள் நூல் வெளியீடு!! (படங்கள்)
சிரேஸ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள் நூல் சர்வதேச மாற்று திறனாளிகள் தினமான, நேற்று நவம்பர் 03 மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் வெளியிடப்பட்டது.
மாற்று திறனாளிகளின் சமூக, வாழ்வியல் கட்டுரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு நிகழ்வானது, மாந்தை மேற்கு வீகான் நிறுவனத்தின் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் வெற்றிச் செல்வி சந்திரகலாவின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் அ.சகிலாபானு கலந்து கொண்டிருந்தார்.
நூல் வெளியீட்டு நிகழ்வினை கவிஞர் மன்னார் பெனில் தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில் கலாநிதி நா.செந்தூர் செல்வனின் வரவேற்பு நடனம் இடம்பெற்றிருந்தது.
தொடர்ந்து பிரதம விருந்தினர் மற்றும் திருமதி.நாகேஸ்வரி மாணிக்கவாசகம் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து நூலை வெளியிட்டு வைக்க, ‘எங்கட புத்தகங்கள்’ அமைப்பின் நிறுவனர் குலசிங்கம் வசிகரன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
நூல் மதிப்புரையை நானாட்டான் பிரதேச செயலாளர் மா.சிறிஸ்கந்தகுமார் நிகழ்த்தியிருந்தார்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் டெ.க.அரவிந்தராஜ், வரவேற்பு நடனத்தை நிகழ்த்திய கலாநிதி. நா.செந்தூர்செல்வனுக்கு நினைவுப்பரிசினை வழங்கி வைத்து, நூல் வெளியீட்டுரையையும் நிகழ்த்தினார்.
நிகழ்வில் இசைக்கச்சேரி வழங்கிய பூவன் இசைக்குழுவினருக்கான நினைவுப் பரிசினை மாற்றுத்திறனாளிகள் இணைந்து வழங்கி வைத்தனர்.
நூலாசியரும், ஊடகவியலாளருமான பி.மாணிக்கவாசகத்தின் சேவையினை பாராட்டி மாந்தை மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ‘காலத்தின் குரல்’ என்ற விருதினை வழங்கி கௌரவித்தனர்.
நூலாசியர் பி.மாணிக்கவாசகத்தின் சார்பாக அவரது பாரியார் விருதினை பெற்றுக்கொண்டிருந்தார். அத்துடன் பிரதம விருந்தினர் மற்றும் வீகான் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரினால், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டிருந்தார்.
நூலாசிரியர் பி.மாணிக்கவாசகம் இணையவழியாக ஏற்புரையை நிகழ்த்தினார்.
நிகழ்வில் இயலாமையுடைய மக்களுக்கான தேசியசபை அங்கத்தவர் வெ.சுப்பிரமணியம், மன்னார் எச்.என்.பி.வங்கி முகாமையாளர் வடிவழகன், தமிழ்மணி கலாபூசணம் மேழிக்குமரன், உயிரிழை அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர், வவுனியா தேசிய கல்வியல் கல்லூரி ஓய்வுநிலை உபபீடாதிபதி ந.பார்த்தீபன் இவர்களுடன் தேசிகன் மற்றும் உயிரிழை அமைப்பின் அங்கத்தவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தன.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.