;
Athirady Tamil News

ஒமிக்ரோன் தொற்றுக்கு இதுவரை உயிரிழப்புக்கள் இல்லை என அறிவிப்பு!!

0

உலகம் முழுவதும் ஒமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையிலும், இதுவரை உயிரிழப்புக்கள் ஏதும் பதிவாகவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உருமாற்றமடைந்த ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரோன் தொற்று பரவ ஆரம்பித்துவிட்டது. இந்தியாவிலும் ஒமிக்ரோன் வைரஸ் கால் பதித்துவிட்டது.

மேலும், ஒமிக்ரோன் வைரஸால் ஆபத்திலுள்ள நாடுகள் பட்டியலில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகள் உள்ளன.

இருப்பினும், உலகம் முழுவதும் ஒமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையிலும், இதுவரை உயிரழப்புக்கள் ஏதும் பதிவாகவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 375 பேர் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.