அமெரிக்க அரசாங்கத்தின் (USAID) ஆதரவுடன் பேருந்து கையளிப்பு!! (படங்கள், வீடியோ)
இலங்கை – USAID மிஷன் பணிப்பாளர் Reed Aeschliman இனால், இன்று (06) யாழில் தொழில் பயிற்சி அதிகாரசபையின் (VTA) தலைவர் எரங்க பஸ்நாயக்கவிடம் தொழில் பேரூந்து ஒன்றிற்கான அடையாளச் சாவி கையளித்து வைக்கப்பட்டது.
நாடு தழுவிய பயணத்தில், சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க அரசாங்கத்தின் (USAID) ஆதரவுடன் செம்மையாக்கப்பட்ட VTA வின் தொழில் பேருந்து ஆனது, உலகத் தரம் வாய்ந்த தொழில்முறை,தொழில் சோதனை
மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதற்காக இலங்கையின் தென் முனையில் உள்ள தேவேந்திர முனை முதல் வடக்கில் பருத்தித்துறை வரை ஆறு மாவட்டங்களில் உள்ள 21 பின் தங்கிய கிராமங்களைச் சேர்ந்த 2,600 இளைஞர் யுவதிகளிடம் சென்றடைந்ததுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”