பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்டதற்கு இந்து ஒன்றிய கண்டனம்!!
பாகிஸ்தான் சியால்கோட்டில், பிரியந்த குமார என்ற இலங்கை பொறியியலாளர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கை இந்து ஒன்றியம் கண்டனம் தெரிவிக்கிறது.
இலங்கை இந்து ஒன்றியம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையிலையே கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பிரியந்த குமார என்ற இளம் பொறியியலாளர் பாகிஸ்தான் சியால்கோட் பகுதியில் மிகக் கொடூரமான முறையில் அடித்தும் எரித்தும் கொல்லப்பட்டுள்ளார். மத நிந்தனையில் ஈடுபட்டார் எனக் குற்றம் சாட்டிய இஸ்லாமியர்கள் அவரை கொடும் சித்திரவதை செய்து, எரித்துக் கொன்றுள்ளனர் என அறியமுடிந்துள்ளது.
குர்ஆனின் கடும்போக்குவாத சிந்தனைகளில் இருந்து, 1947 ஆம் ஆண்டு தோன்றிய பாகிஸ்தான் நாடு, தனது தோற்றத்தின்போதே சுமார் 30 லட்சம் இந்து, சீக்கிய, பெளத்த மக்களை கொலை செய்துதான் தோன்றியது. பாகிஸ்தானாக அறிவிக்கப்பட்ட, பாரத தேசத்தின் பகுதியில் வாழ்ந்த இந்து, சீக்கிய, பெளத்த மக்கள் மீது முஸ்லிம்கள் கொடிய வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனர். இதனால், 1947 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 30 லட்சம் இந்துக்கள் கொல்லப்பட்டனர். அன்றிலிருந்து சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத தேசமாக பாகிஸ்தான் உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள மத நிந்தனைச் சட்டத்தால் பல்லாயிரக்கணக்கான சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத நிந்தனையை காரணம் காட்டி பல நூறுபேர் பாகிஸ்தானில் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள்.
இஸ்லாம் அமைதியானதொரு மார்க்கம், அதைத் தவறாகப் புரிந்து கொண்டவர்களதான் இப்படியான கொடூரங்களைச் செய்வதாக முஸ்லிம்களும், முஸ்லிம் அடிப்படை வாதத்துக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக பலர் பேசுவதையும் காணமுடிகிறது. பிரியந்த குமாரவின் கொலையை இலங்கை வாழ் முஸ்லிம்கள் சிலர் ஆதரிப்பதை சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது. அவர்கள் மீது இலங்கை அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
பிரியந்த குமாரவுக்கு இலங்கை இந்து மக்கள் சார்பில் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”