கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோல்வி!!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு இரண்டாவது தடவையாகவும் இன்று (07.12) தோற்றகடிக்கப்கட்டுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு கடந்த மாதம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அதனை மீள திருத்தி இன்றைய தினம் (07.12) சபை தவிசாளர் எஸ்.தணிகாசலம் அவர்களால் சபையில் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து பாதீடு தொடர்பான வாதங்கள் இடம்பெற்றதுடன், பாதீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஈபிஆர்எல்எப், சிறிலங்கா சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேட்சைக் குழு உள்ளடங்கிய 17 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சி ஒரு உறுப்பினருமாக 9 பேர் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதன்படி 9 மேலதிக வாக்குகளால் வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”