154 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!!
வவுனியா ஓமந்தை இரானுவ சாவடியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 154 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து மீன்கள் ஏற்றும் குளிரூட்டி வாகனத்தில் கொழும்புக்குக்கு 154 கிலோ கேரளா கஞ்சா கடத்தப்படுவதாக ஒமந்தை இரானுவத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திடமான குறித்த வாகனத்தினை ஒமந்தை இரானுவ சாவடியில் இரானுவத்தினர் மறித்து சோதனைக்குட்படுத்தினர்.
இதன் போது வாகனத்தில் சூட்சுமமான முறையில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 154 கிலோ கேரளா கஞ்சாவினை இரானுவத்தினர் கைப்பற்றியதுடன் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரையும் கைது செய்து ஒமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஒமந்தை பொலிஸார் வாகனம், கேரளா கஞ்சா, இரு சந்தேகநபர்கள் ஆகியோரை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.