பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சுகாதாரத்தை கடைபிடிக்காத பட்சத்தில், நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கின்றனர்.
நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையை விட அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
சுகாதார சட்டத்தை மீறி பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராகவும் அவ்வாறான இடங்களுக்குள் பிரவேசித்து சுகாதார சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பொது போக்குவரத்தில் சுகாதார நடைமுறைகள் கடுமையான முறையில் மீறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.