பெண்களுக்கு ரூ.1000 திட்டத்தால் திட்டி தீர்க்கிறார்கள்: அரவிந்த் கெஜ்ரிவால்…!!
டெல்லியில் இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்தடுத்து வர இருக்கும் பிற மாநில சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிப் பெற்று ஆட்சியைப் பிடிக்க முனைப்பு காட்டி வருகிறார்.
இதற்காக, மக்களை கவரும் வகையில் வாக்குறுதிகளையும் அறிவித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப் சென்றிருந்த ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். ஒரு வீட்டில் மூன்று பெண்கள் இருந்தால் மூன்று பேருக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
ஏற்கனவே அரசு கஜானா காலியாகும் நிலையில் இருக்கும்போது, ஆம் ஆத்மி கட்சியால் எப்படி கொடுக்க முடியும் என்று கெஜ்ரிவால் அறிவிப்புக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த வாக்குறுதி அளித்ததால் என்னை திட்டி தீர்க்கிறார்கள் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பஞ்சாப் மாநிலம் ஜலாந்தர் பகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-
18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று சில நாட்களுக்கு முன்பு அறிவித்தேன். நான் அறிவித்ததிலிருந்து அவர்கள் என்னைத் திட்டுகிறார்கள்.
இந்தத் தொகை கொடுக்கப்பட வேண்டுமா? வேண்டாமா? என்று நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். அவர்கள் என்னை அதிகம் திட்டுவதால், நான் ஏதாவது தவறு செய்திருக்கிறோமோ என்று நினைத்தேன்.