ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம்!!
நாளை தொடக்கம் மீண்டும் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தீர்மானித்துள்ளனர்.
சபாநாயகருடன் இடம்பெற்ற கலந்துரையாடலினை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றில் பாதுகாப்பை உறுதிச் செய்யுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.