10,000 வீடுகளுகள் அடுத்த ஆண்டு நிர்மாணம் !!
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன், மலையகத்தில் 10 ஆயிரம் வீடுகளை
நிர்மாணிக்கும் திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சபைக்கு அறிவித்தார்.
நகர அபிவிருத்தி, வீடமைப்பு, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உள்ளிட்ட
அமைச்சுக்களுக்கான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், நகர்ப்புறங்களில் உள்ள குறைந்த வசதிகளைக் கொண்டவர்களுக்கான வீட்டுத் திட்டத்தின் மூலம் 2024ம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின்கீழ் அனைத்து குடும்பங்களுக்கும்
அனைத்து வசதிகளையும் கொண்ட வீடுகளை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது எனவும் கூறினார்.2024 ஆம் ஆண்டுக்குள் கொழும்பில் உள்ள குறைந்த வசதிகளைக் கொண்ட வீடுகளை மாடிவீட்டுத் திட்டமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மலையக மக்களுக்கு 4,000 வீடுகளையும் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுகொடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.