வரவு,செலவுத்திட்டம் மாநகரசபை உறுப்பினர்களினால் எகமானதாக அங்கீகரிக்கப்படும் என்ன நம்பிக்கை இருக்கின்றது – யாழ் மாநகர முதல்வர்!!
யாழ்மாநகர சபையின் 2022 ம் ஆண்டுக்கான வரவு,செலவுத்திட்டம் மாநகரசபை உறுப்பினர்களினால் எகமானதாக அங்கீகரிக்கப்படும் என்ன நம்பிக்கை இருக்கின்றது.என யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
எதிர்வரும் நாளில் யாழ் மாநகரசபைக்கான வரவு,செலவுத்திட்டம் யாழ் மாநகரசபையில் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் சமர்ப்பிக்கப்படயிருக்கின்ற நிலையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கின்றபோதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்
மாநகரசபையில் அங்கம் வகிக்கின்ற அனைத்து தலைமைத்துவ கட்சிகளுடைய பகிரங்கமாக அன்பான வேண்டுகோள் விடுகின்றேன் யாழ் மாநகரசபையில் எதிர்வரும் ஆண்டுக்கான சமர்ப்பிக்கின்ற வரவுசெலவு திட்டத்தினை ஆதரிக்கவேண்டும். எனவிடுகின்றேன். ஆனால் நான் நினைக்கவில்லை.மாநகர சபையில் அங்கத்துவம் வகிக்கின்ற தலைமைத்துவக்கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த வரவுசெலவுத்திட்டத்தினை தோற்கடிக்கவிதமாக முடிவுகளை எடுப்பார்கள் என நம்பவில்லை.
எனவே எகமானதாக அனைத்துகட்சிகளும் நல்கும் என எதிர்பார்க்கின்றேன்.இந்த வரவு செலவுத்திட்டத்திலே நாங்கள் அனைத்து கட்சிகளுடன் பேசி அதனை மக்களால் முன்வைக்கப்படுகின்ற அனைத்து வேலைத்திட்டங்களை உள்அடக்கியிருக்கின்றோம்.ஆனாலும் இந்த வரவுசெலவுத்திட்டத்தினை தோற்கடிக்கவேண்டிய தேவை எந்ததொருகட்சிக்கும் இருக்கும் என கருதவில்லை.
அனைத்து திட்டங்களும் உள்ளாக்கப்பட்டுள்ளது.மாநகர சபையின் உறுப்பினர்களினால் கொடுக்கப்பட்ட பிரேரணையினை தோற்கடிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”