இன்னும் பல ஆண்டுகளுக்கு கார்களை இறக்குமதி செய்ய முடியாது !!
கார்களை இறக்குமதி செய்வதை நிறுத்தும் அரசாங்கத்தின் முடிவால் நாட்டில் உள்ள 90% க்கும் அதிகமான கார் விநியோக நிலையங்கள் மூடப்பட்டு சுமார் 400,000 பேர் வேலை இழந்துள்ளனர் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்தார்.
கடுமையான டொலர் தட்டுப்பாட்டால் நாடு இன்னும் பல ஆண்டுகளுக்கு கார்களை இறக்குமதி செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.
Suzuki Wagon R, Toyota Paso, Toyota Vitz, Toyota Axio, Toyota Primio, Toyota Rice, C.H.R, வெசல், கிரீஸ் உள்ளிட்ட கார்களுக்கு சந்தையில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி முதல் கார்கள் இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.