பாராளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தை ஒரு நாள் நிறுத்தி வைத்த எதிர்க்கட்சிகள்…!!
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடல் பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து பாராளுமன்ற நடவடிக்கைகளை முடக்கி வருகின்றனர். அவைக்கு வெளியே காந்தி சிலை முன்பும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்ததால், அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று ஒருநாள் மட்டும் தர்ணா போராட்டத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் ரத்து செய்தனர்.
மாநிலங்களவை
எனினும் ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாராளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தபின்னர், பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்காததால் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.