பூநகரி மண்ணித்தலை சிவாலய மீளுருவாக்க பணிகள் ஆரம்பம்! (படங்கள், வீடியோ)
பூநகரி மண்ணித்தலை சிவாலயத்தை மீளுருவாக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பூநகரி மண்ணித்தலை சிவாலயம் 1990ஆம் ஆண்டு அழிவடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பேணி பாதுகாத்து வந்த நிலையில் , அதனை மீளுருவாக்கம் செய்வதற்கு தற்போது, இலங்கை தொல்லியல் திணைக்களம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அதனை அடுத்து தொல்லியல் ஆய்வு உத்தியோகஸ்த்தர் வி.மணிமாறனின் நெறிப்படுத்தலில் , தொல்லியல் அதிகாரிகளின் மேற்பார்வையிலும் மீளுருவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதில் யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் ஆசிரியர்கள் , மாணவர்களும் முக்கிய பங்கேடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”