ஒமைக்ரான் அச்சுறுத்தல்- ரிஸ்க் நாடுகள் பட்டியலில் இருந்து சிங்கப்பூரை நீக்கியது மத்திய அரசு…!!
ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஒமைக்ரான் பரவலாம் என்ற ஆபத்தான நாடுகள் பட்டியலை வெளியிட்டு, அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் இந்தியா வந்ததும் விமான நிலையங்களிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், ஆபத்தான நாடுகளில் பட்டியலில் இருந்து சிங்கப்பூரை மத்திய அரசு நீக்கி உள்ளது. இதன்மூலம், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் கூடுதல் கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளைப் பின்பற்ற தேவையில்லை.
தற்போது இந்தியா வெளியிட்டுள்ள ரிஸ்க் நாடுகள் பட்டியலில், பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, கானா, மொரிஷியஸ், நியூசிலாந்து, தான்சானியா, ஜிம்பாப்வே, ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் உள்ளன.