முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி இரங்கல்…!!
தமிழகத்தில் நேற்று முன்தினம் குன்னுார் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பிபின் ராவத் மறைவுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி அன்டோனி பிளின்கன்
இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய முப்பாஇ தலைமை தளபதி பிபின் ராவத் மறைவு குறித்து வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசினேன். பிபின் ராவத் தாய்நாட்டிற்காக உழைத்த ஒப்பற்ற தலைவர். இந்திய, அமெரிக்க ராணுவ கூட்டுறவை மேலும் வலுப்படுத்தியதில் பிபின் ராவத் முக்கிய பங்காற்றியுள்ளார். அவரை இழந்து வாடும் இந்திய மக்களுக்கும், குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.