உத்தரகாண்ட் வன ஆய்வு நிறுவனத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி…!!
உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் வன ஆய்வு நிறுவனம் அமைந்துள்ளது. இது வனவியல் ஆய்வு மற்றும் கல்விக்கான இந்திய கவுன்சில் அமைப்பினைச் சேர்ந்த ஒரு கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. மிகவும் பழமையான நிறுவனங்களில் ஒன்றான இந்த ஆய்வு நிறுவனம், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பார்வையாளர்களுக்கான அனுமதியை நிறுத்தி வைத்திருந்தது.
தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்து, படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. எனவே, டேராடூன் வன ஆய்வு நிறுவனத்தில் வரும் 13ம் தேதியில் இருந்து பார்வையாளர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முதலில் தினசரி 200 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்கள் வரலாம். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே நிறுவன வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.