இந்தியாவில் இதுவரை 25 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு -மத்திய அரசு விளக்கம்…!!
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், நாடு முழுவதும் 25 பேர் மட்டுமே லேசான அறிகுறியுடன் கூடிய ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதில் 10 பேர் மகாராஷ்டிரா மாநிலத்திலும், 9 பேர் ராஜஸ்தான் மாநிலத்திலும், மூவர் குஜராத் மாநிலத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகாவில் பாதிக்கப்பட்ட இரண்டு பேருக்கும், புதுடெல்லியில் ஒருவருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு சிகிச்சை வழங்கப்படுகிறது.
மருத்துவ ரீதியாக ஒமைக்ரான் வைரஸ் இன்னும் பெரும் அச்சத்தை உருவாக்கவில்லை , எனினும் விழிப்புணர்வு நடவடிக்கையை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று மாநிலங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிவுறுத்தி உள்ளதாக அதன் மேலாண்மை இயக்குநர் பல்ராம் பார்கவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாடு முழுவதும் 86.2 சதவீத ஆண்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மொத்தமாக 53.5 சதவீத பேருக்கு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.