வந்தே பாரத் திட்டத்தில் வளைகுடா நாடுகளில் இருந்து 7 லட்சம் தொழிலாளர்கள் தாயகம் திரும்பினர் – மத்திய அரசு…!!
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் சிக்கிக்கொண்டுள்ள இந்தியர்களை தாய்நாடு அழைத்து வரும் விதமாக மத்திய அரசு ஏர் இந்தியா விமான சேவை மூலம் வந்தே பாரத் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தின்கீழ் வளைகுடா நாடுகளில் இருந்து சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்தியா திரும்பியுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஐக்கிபதிலளித்து கூறியதாவது:
மத்திய அரசு செயல்படுத்தி வரும் வந்தே பாரத் திட்டத்தின்கீழ் வளைகுடா நாடுகளில் இருந்து 7 லட்சத்து 16 ஆயிரத்து 662 தொழிலாளர்கள் இந்தியா திரும்பியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 3,30,058 பேரும், சவுதி அரேபியாவில் இருந்து 1,37,900 பேரும், குவைத்தில் இருந்து 97,802 பேரும், ஓமனில் இருந்து 72,259 பேரும், கத்தாரில் இருந்து 51,190 பேரும், பஹ்ரைனில் இருந்து 27,453 பேரும் தாயகம் திரும்பியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.