புர்கினா பாசோ நாட்டில் அரசுப் படையினர் மீது துப்பாக்கி சூடு- 14 பேர் பலி…!!
மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோ நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் அதிபர், பிரதமர், ராணுவ தளபதியை நீக்கி உத்தரவிட்டார். இதனால் அங்கு உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டு பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பயங்கரவாத தாக்குதல்களும் அரங்கேறுகின்றன.
இந்த சூழ்நிலையில் திட்டாவ் நகர் அருகே பதுங்கியிருந்த ஒரு கும்பல், அரசுப்படையினர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில் அரசுப் படையை சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர். இந்த துப்பாக்கி சூட்டுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.