;
Athirady Tamil News

அமெரிக்காவை அடுத்தடுத்து தாக்கிய சூறாவளி- 50 பேர் பலி…!!

0

அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது கென்டக்கி மாகாணம். இந்த மாகாணத்தில் இன்று அடுத்தடுத்து நான்கு முறை பயங்கர சூறாவளிக் காற்று தாக்கியது. இதனால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. சூறாவளி தாக்குதலில் சிக்கி 50 பேர் உயிரிழந்து இருக்கலாம் என செய்திகள் வெளிவந்துள்ளன.

சுமார் 200 மைல் தூரத்திற்கு சுழன்று அடித்த காற்று பல்வேறு கவுண்டிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி விட்டதாக கென்டக்கி மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார். உயிரிழப்பு எண்ணிக்கை 100 வரை கூட இருக்கலாம் எனவும் அவர் அச்சம் தெரிவித்தார்.

கென்டக்கி மாகாண வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் மோசமான சுழல் காற்று இது எனவும் அங்குள்ள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. மேபீல்டு நகரத்தில் உள்ள ஒரு மெழுகுவர்த்தி தொழிற்சாலையின் மேல் பகுதி சேதம் அடைந்ததன் காரணமாக இவ்வளவு பெரிய உயிர் சேதம் ஏற்பட்டு விட்டதாகவும் கவர்னர் தெரிவித்தார். சுழல் காற்று காரணமாக மேபீல்டு நகரத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இல்லினாய்சில் ஒரு பெரிய அமேசான் குடோனை சூறாவளி தாக்கியதாகவும், அங்கு சுமார் 100 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.