பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!!
20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களை செலுத்திக் கொண்ட 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசியாக வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.