;
Athirady Tamil News

மொழிப்புலமை தெரிந்து இருந்தால் யுத்தம் செய்து இருக்க தேவையில்லை!!

0

கடந்த 30 வருடம் காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருக்கின்ற மக்கள் சிங்களம் மொழிப்புலமை தெரிந்து இருந்தால் யுத்தம் செய்து இருக்க தேவையில்லை என இந்து பௌத்தகலாச்சார பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய அத்துலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

வடமாகாண இந்து பௌத்த கலாச்சார பேரவையின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் இரண்டாம் மொழிக்கற்கை நெறியினை முதற்கட்டமாக 32 மாணவர்களுக்கான பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று யாழ் மத்தியின் அன்னசத்திர பகுதியில் அமைந்துள்ள இந்து பௌத்த கலாச்சார பேரவையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இந்து பௌத்த கலாச்சார பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய அத்துலிய ரத்தனதேரர் கலந்துகொண்டு இரண்டு மொழிக்கற்கையின் சிங்கள பாடநெறியினை கற்ற மாணவர்களுக்கே இச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் சிங்களம், தமிழ் மொழிலிலான பிரச்சனையில் விவசாயிகளுக்கான காணியில்லை, விவசாயிகள் தொழில்நுட்பத்திற்கான தொழில் முறையில்லை அதற்கான நிதியில்லை அதனை முன்னெடுத்து செல்லுகின்ற போகின்றவர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்புயில்லை. இவை தீர்க்கப்பட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும். அதிலும் சாதிப் பிரவினை ஏற்றுக்கொள்ள முடியாது நன்கு வளர்ச்சி அடைந்த பிரிவினையில் சாதிப் பிரவினையினை ஏற்றுக்கொள்ள முடியாது.

விவேகானந்தர் மற்றும் ஏனைய சமய பெரியார்களின் உருப்பட்ட உபதேசங்களில் கூறப்பட்ட ஒன்று இந்த பிரச்சனை இருக்ககூடாது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் நாங்கள் எல்லாரும் சாதிப்பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டும். பௌத்த மதத்திலும் சாதிப்பிரவினையினை புத்தபெருமான் எதிர்க்கின்றார். உலகத்தினை நேசிப்பதுதான் பௌத்த மதம் உலகத்தில் உள்ளதைபோன்று அனைத்து உயிர்களையும் நேசிக்கவேண்டும். அதுதான் காலத்தின் அவசியம். இப்போது எமது மாகாணத்தில் தேவையாக இருப்பது கணனி பொறியிலாள வருவது மிக அவசியம் அதற்கான தொழில்வாய்ப்பு அதிகமாக கிடைக்கும். அதற்காக தயார் நிலையில் உருவாக்கவேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.