;
Athirady Tamil News

கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயார் – யோகி ஆதித்யநாத் உறுதி…!!

0

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

இந்தியா மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு திட்டம் உலக அளவில் சிறந்தது, இந்திய அளவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உத்தரப்பிரதேசம் சிறந்து விளங்குகிறது.

கொரோனா மூன்றாவது அலை வருமோ என்ற பயத்தில் உலக நாடுகள் உள்ளன. மத்திய அரசும், உத்தரப்பிரதேச அரசும் முழு அளவில் தயார் நிலையில் உள்ளன.

இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த யோகி ஆதித்யநாத்

கொரோனா தொற்று குறித்த இலவச பரிசோதனைகள், இலவச சிகிச்சை மற்றும் இலவச தடுப்பூசிகளை வழங்கி வருகிறோம். மேலும் இலவச உணவு தானியங்கள் வழங்கும் பிரசாரத்தையும் செய்கிறோம்.

கொரோனா மூன்றாவது அலை பாதிப்பு காணப்படும் சில நாடுகளில், தடுப்பூசி போட்டவர்கள் தப்பித்துள்னர். எனவே தடுப்பூசிதான் பாதுகாப்பு கவசம் போல் செயல்படுகிறது. மத்திய அரசும், உத்தரப்பிரதேச அரசும் இரட்டை எஞ்ஜின் போல் செயல்படுவதால் உத்தரப்பிரதேசத்தில் ரேஷன் கடைகள் மூலம் மாதத்திற்கு இரண்டு முறை உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு விலைகள் சந்தையில் தற்போது விலை உயர்ந்துள்ளதால் ரேஷன் கார்டு பயனாளர்களுக்கு அவற்றை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தமது பேச்சின்போது குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.