;
Athirady Tamil News

அதிகாரத்தையே ஜனாதிபதி பயன்படுத்தினார் !!

0

பாராளுமன்ற கூட்டத்தொடரை நேற்று முன்தினம் (12) நள்ளிரவுடன் ஒத்திவைப்பது தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட தீர்மானம் அவசர தீர்மானம் இல்லையென தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கையின் சகல ஜனாதிபதிகளும் அந்த அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளனர் என்றும் அது அரசியலமைப்பு ஊடாக நேரடியாகவே ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமாகும் என்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (13) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், 1978ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இலங்கையின் அனைத்து ஜனாதிபதிகளும் இந்த அதிகாரத்தை பயன்படுத்தும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையின் முதலாவது உப- உறுப்புரையின் கீழ், பாராளுமன்றத்தை கலைக்க, கூட்டுவதற்கு , இறுதி அமர்வை நிறைவு செய்ய அவருக்கான அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளனவென தெரிவித்த அவர், எனினும் புதிய அமர்வு இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஜனவரி மாதம் வெளிநாட்டு கடனை செலுத்தவிருப்பதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் உண்மையல்லை என்றும் இதற்கும் பாராளுமன்றத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றார்.

இலங்கை செலுத்த வேண்டிய கடன், வெளிநாட்டு நிதி நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும். இதனுடன் பாராளுமன்ற அமர்வு எவ்விதத்திலும் தொடர்புபடவில்லை எனவும் தெரிவித்தார்.

நேற்று (13) விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாகவும் இதற்கு நிதியமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், வழமை போல் நடக்கும் சாதாரண அமைச்சரவை சந்திப்பே இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.