காணி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!!
காணி அபிவிருத்திக் கட்டளை திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வௌியிடவும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று (14) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்தல்
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள வழங்கல் பத்திரங்களின் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு சில நிபந்தனைகளால் வழங்கல் பத்திரங்களுக்குரிய காணிகளிலிருந்து உச்சப் பயன்களைப் பெறுவதற்கான இயலுமை இல்லையென்பது கண்டறியப்பட்டுள்ளமையால், குறித்த நிபந்தனைகளை பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் திருத்தம் செய்வதற்கு இயலுமான வகையில் காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக 2021 ஜனவரி மாதம் 04 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் காணி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.