ஒமைக்ரான் தொற்றால் உயிர்ப்பலி அதிகரிக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!!
ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு உலகின் முதல் பலி, இங்கிலாந்தில் நேற்று முன்தினம் பதிவாகி இருக்கிறது.இதற்கு மத்தியில் உலகமெங்கும் ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது.இந்த வைரசால் ஆஸ்பத்திரி சேர்க்கைகளும், இறப்புகளும் அதிகரிக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஒமைக்ரான் வைரஸ்
இதை உலக சுகாதார அமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.இனி வரும் வாரங்களில் இந்த வைரசின் தீவிரத்தன்மை பற்றிய கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் நிபுணர்கள் கூறி உள்ளனர்.