’தீர்க்க வேண்டியவர் பறக்க தீர்மானித்தார்’ !!
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக வெளிநாட்டுக்கு பறக்க தீர்மானித்துள்ளார் என, மக்கள் விடுதலை முன்னிணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
1,500 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய பொருட்ககள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகங்களில் சிக்கியுள்ளன. எரிவாயு சம்பந்தமான வெடிப்புகள் இடம்பெறுகின்றன.
ஆனால், விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பெசில், தனது பேரக் குழந்தைகளைப் பார்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளார்.
நிதியமைச்சரும், அரசாங்கமும் தங்களது சொந்த நலன்களுக்காக மட்டுமே செயற்படுவதாகவும் மக்களின் நலன்களுக்காக அல்ல என்றும் அவர் கடுமையாக சாடினார்.