;
Athirady Tamil News

சீன அரசாங்கம் தொடர்ந்து யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்கும் – சீன தூதுவர்!! (படங்கள்)

0

சீன அரசாங்கம் தொடர்ந்து யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்கும் என இலங்கைக்கான சீன தூதுவர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளன சமாசத்தில் மீனவர்களுக்கு வலைகள் மற்றும் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சீன தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாக நல்லுறவு நிலவி வருகின்றது அதன் ஒரு அங்கமாகவே சீன தூதரகமானது யாழ்ப்பாண மக்களுக்கு மீன்பிடி வலை மற்றும் உலர் உணவுப் பொதிகளை இன்றைய தினம் வழங்கி வைக்கின்றோம்.

இந்த உதவி வழங்கும் நிகழ்வில் ஒரு ஆரம்ப நிகழ்வாகவே நாங்கள் கருதுகின்றோம் இன்று ஆரம்பமான இந்நிகழ்வானது சீனா மற்றும் வடக்கு மக்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் என நாங்கள் கருதுகின்றோம்.

குறிப்பாக சீன தூதரகமானது இலங்கைக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றது குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக உலகளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது சீனா நாடான இலங்கைக்கு பெருமளவில் உதவிகளை வழங்கியுள்ளது

அதேபோல வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கான தடுப்பூசியிணை பெற்றுக்கொடுப்பதில் சீனா பெரும்பங்காற்றியுள்ளது.

அதேபோல் நேற்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநரிடம் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் என ஐந்து நீர் சுத்திகரிக்கும் இயந்திரமபொறி முறையினையும் வடக்கு மாகாண ஆளுநருடன் கையளித்துள்ளோம் அதேபோல் 5 மடிக்கணணிகள் மற்றும் ஒரு தொகுதி புத்தகத்தையும் பொது நூலகத்திற்கு வழங்கியுள்ளோம்.

எனவே இவை அனைத்தும் ஒரு ஆரம்பமாகவே நாங்கள் கருதுகின்றோம் எதிர்காலத்தில் சீன தூதரகம் யாழ்ப்பாண மக்களுக்கு தொடர்ச்சியான உதவிகளை வழங்கும்.

உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா காலத்தில் இந்த சிறிய உதவி வழங்கப் படுவதை ஒரு ஆரம்பப் புள்ளியாகவே நாங்கள் பார்க்கின்றோம் எதிர்காலத்தில் உதவித்திட்டங்கள் வழங்க முடியும் என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

இலங்கைக்கான சீன தூதுவர் நல்லூர் கந்தனை தரிசித்தார்! (படங்கள், வீடியோ)

சீன தூதுவர் யாழ்ப்பாணம் – அரியாலை கடலட்டை பண்ணைக்கு விஜயம்!! (படங்கள், வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.