பதில் நிதியமைச்சராக ஜி.எல் !

பதில் நிதியமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதியமைமைச்சர் பெசில் ராஜபக்ஷ, தனது பாரியாருடன் டுபாய்க்கு சென்றுள்ளார். இந்நிலையில், பதில் நிதியமைச்சராக, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிவைத்தார்.