ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை – மீட்பு பணி தீவிரம்…!
மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள டோனி கிராமத்தில், திவ்யான்ஷி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. பிற்பகல் 3 மணி அளவில் தனது தந்தையின் விவசாய நிலத்தில் விளையாடிக்கொண்டிருந்த அந்த குழந்தை அங்கு திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.
தற்போது 20 அடி ஆழத்தில் சிக்கியுள்ள அந்த குழந்தையை மீட்கும் பணி, உள்ளூர் காவல்துறை மற்றும் ராணுவ வீரர்களின் உதவியுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆழ்துளை கிணற்றுக்கு பக்கத்திலேயே குழி ஒன்றை தோண்டி, குழந்தையை மீட்கும் முயற்சி நடைபெறுவதாகவும், குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜன் ஆழ்துளை கிணற்றுக்குள் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.