சமையல் எரிவாயு வெடிப்பு – 8 பேர் கொண்ட குழுவின் இறுதி அறிக்கை தயார்!!
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்புகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எட்டு பேர் கொண்ட குழுவின் அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 18 எரிவாயு வெடிப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்தின் கடந்த 16 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 700 எரிவாயு தொடர்பான சம்பவங்கள் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு கோரி இன்று காலை பெண்கள் உரிமைகள் அமைப்பினர் நுகர்வோர் அதிகார சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.