;
Athirady Tamil News

கொவிட் தொற்றுக்கு மேலும் 22 பேர் உயிரிழப்பு!!

0

நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (16) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,720 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 341 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 546,839 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 577,484 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.