ஒமைக்ரானுக்கு தடுப்பூசிக்கு பதில் புதிய மாத்திரை கண்டுபிடிப்பு…!!
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன.
தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
இந்தநிலையில் உருமாறிய புதிய கொரோனா வைரசான ஒமைக்ரானை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிக்கு பதில் பைசர் மாத்திரைகள் நல்ல பலன் அளிப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த மாத்திரை பாதிக்கப்பட்டவர்களை, மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படுவதையும் இறப்புகளையும் கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைக்கும் சக்தி கொண்டது என அமெரிக்காவின் பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.
பைசர்
நோய் அறிகுறி உள்ளவர்கள் தொடர்ந்து 5 நாட்கள் இந்த மாத்திரையை எடுத்துக் கொண்டால் குணமாகும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பல்வேறு நாடுகள் பைசர் மாத்திரையை பயன்படுத்த முடிவு செய்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் தான் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகளவு உள்ளது. இதனால் இந்த பரவலை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் பைசர் மாத்திரை மீது தனது கவனத்தை திருப்பி உள்ளது.
இந்த நாடுகளில் இன்னும் இதற்கு அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்றாலும் அவசரகால பயன் பாட்டுக்காக முன்கூட்டியே பைசர் மாத்திரையை பயன்படுத்தலாம் என ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் ஐரோப்பிய நாடுகள் விரைவில் புதிய வகை மாத்திரையான பைசர் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.