ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!
உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான், பிரிட்டன் உள்பட ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் அது பரவ தொடங்கி உள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியா பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் ஒமைக்ரான் தன்மை குறித்து புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் பேசுகையில்:
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங்
கொரோனா வைரஸ் ஆபத்து உலகளவில் இன்னும் அதிகமாகவே உள்ளது. ஒமைக்ரான் மிதமானது என்று நாம் நிராகரிக்க கூடாது.
ஒமைக்ரான் குறைவான நோய் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்டவை
மீண்டும் சுகாதார அமைப்புகளை திணறடிக்கும்.
ஒமைக்ரானுக்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறனை முழுமையாக மதிப்பிடுவதற்கு போதுமான சான்றுகள் கிடைக்க இன்னும் சில வாரங்கள் ஆகும். தற்போதைய வரையறுக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில், இதற்கு முந்தைய வேறு எந்த வகையிலும் காணப்படாத வேகமான விகிதத்தில் ஒமைக்ரான் பரவுகிறது. தென்னாப்பிரிக்காவிலிருந்து வெளிவரும் தகவல்கள் மூலம் ஒமைக்ரான் மூலம் மீண்டும் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இவ்வாறு டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்தார்.