கோவாவேக்ஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்…!!
இந்தியா முழுவதும் தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொது மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார்போல் நாங்கள் மருந்துகளை சப்ளை செய்து வருகிறோம் என சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் ஆதர் பூன வல்லா தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்தியாவின் சீரம் நிறுவனமும், அமெரிக்காவின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமும் இணைந்து கோவோவேக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளன. இந்த தடுப்பூசி சிறந்த பாதுகாப்புடன் 90 சதவீத செயல்திறனை கொண்டிருப்பதாக அறிவித்திருந்தன.
மேலும், கோவாவேக்ஸ் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி கேட்டு உலக சுகாதார அமைப்பிடம் மனு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் கோவாவேக்ஸ் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு உலக சுகாதாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது என அந்நிறுவன தலைவர் ஆதார் பூனவல்லா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.