இங்கிலாந்தை துரத்தும் கொரோனா – ஒரே நாளில் 90,418 பேருக்கு பாதிப்பு…!!
இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 4-வது இடத்தில் நீடிக்கிறது.
இங்கிலாந்தில் கடந்த 15-ம் தேதி 78,610 பேருக்கும், 16-ம் தேதி 88,376 பேருக்கும், 17-ம் தேதி 93,045 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
இந்நிலையில், தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் இங்கிலாந்தில் அதிகபட்சமாக 90,418 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 12 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 125 பேர் இறந்துள்ளனர். இதனால் இங்கிலாந்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 97.41 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது 13.90 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.