உண்ணி காய்ச்சல் காரணமாக மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூன்று நாள்களின் பின் இன்று உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்த செபஸ்ரியன் பெனடிக் ரொசாரி (வயது-63) என்ற மூதாட்டியே உயிரிழந்தார்.
கடந்த 16ஆம் திகதி காலை உடல்நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்புக்கு உண்ணி காய்ச்சலே காரணம் என மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”