;
Athirady Tamil News

ஓமந்தை மகாவித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறந்து வைப்பு!! (படங்கள்)

0

வவுனியா ஓமந்தை மகாவித்தியாலயத்தில் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான திறன் வகுப்பறையினை பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இன்று 20 டிசம்பர் 2021 திறந்து வைத்தார்.
பாடசாலை அதிபர் க.தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

நிகழ்வின் முன்னதாக அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு பாண்டு வாத்தியம் முழங்க அழைத்து வரப்பட்டனர்.
புpரதம அதிதியால் திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டதன் பின் உரையாற்றிய கல்லூரி அதிபர், சாதாண உயர்தரம் கற்கும் மாணவர்களின் கல்வி செயற்பாட்டுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார். கல்லூரி அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக உடனடியாகவே மாணவர்களின் கல்வி செயற்பாட்டிற்கு ஐந்து இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அறிவித்திருந்தார்.

தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய பிரதம விருந்தினர், மாணவர்களின் கல்வி வளர்ச்சியிளால் மாத்திரமே ஒரு இனத்தின் இழந்துபோன உரிமைகளை பெறலாம், கல்வியினால் மட்டும் சுதந்திரத்தை பெறலாம், கல்வியினால் மாத்திரமே வறுமையை ஒழிக்கலாம் என தெரிவித்தார்.
நிகழ்வில் வவுனியா வடக்கு கல்விப்பணிப்பாளர் லெனின் அறிவழகன், ஒமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.