சிலி நாட்டின் அதிபராக இடதுசாரி தலைவர் கேப்ரியல் போரிக் தேர்வு…!!
தென் அமெரிக்க நாடான சிலியில் அரசுக்கு எதிராக பல மாதங்களாக போராட்டம் நடைபெற்றது.
இதற்கிடையே, சிலி நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அரசின் புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக இடதுசாரி தலைவரான கேப்ரியல் போரிக் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், 56 சதவீத வாக்குகளைப் பெற்று கடும் போட்டியாக விளங்கிய ஜோஸ் அன்டோனிய காஸ்டை வீழ்த்தினார். இதன் மூலம் அந்நாட்டின் வரலாற்றில் மிக இளம் வயதில் அதிபராகும் பெருமையை போரிக் பெறுகிறார்.
இன்னும் 3 மாதங்களில் இவர் தலைமையிலான அரசு பொறுப்பேற்கும் நிலையில், சிலியில் தற்போதுள்ள சுரங்க திட்டத்தை முடிவுக்கு கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளார்.